தீவகத்தைச் சேர்ந்த மாவீரர்களுக்கு வேலணை – சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் வணக்கம் செலுத்தப்பட்டது.
மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர், முன்னாள் போராளிகள், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர்.
மாலை 6.05 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் ஒருவரின் தந்தை பொதுச் சுடரை ஏற்றினார். தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர் சுடர்களை ஏற்றினர்.
பல வருடங்களுக்கு பின்னர் தாங்கள் தமது பிள்ளைகளை மன நிறைவுடன் நினைவுகூர்ந்தனர் என மாவீரர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், பா.கஜதீபன், மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


