கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டார். தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், சிறிலங்கா பிரதமர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Tag: குண்டுவெடிப்பு
தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 […]
நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு
நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்ட அமுலின் போது, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.