தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அன்னை பூபதியின் 31 ஆவது நினைவுத் தினம் யாழில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தமிழ் தேசிய வாதத்தை மௌனிக்க இடமளிக்க மாட்டோம். மறக்க விடமாட்டோம். அப்போதைய சூழலில் போராட்டத்தை இனவழிப்பின் ஊடாக மௌனிக்க செய்ததோடு, மக்களுக்கு போராட்டத்தின் மீது வெறுப்பு ஏற்படும் வகையில் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.தமிழ் அரசியலிலிருந்து தமிழ் தேசியத்தை நீக்கச் செய்யுமளவிற்கு தேசிய உணர்விற்கு அடையாளமாக இருந்த போராட்டத்தை இல்லாமல் செய்துள்ளனர். ஆனால் போராட்டத்தை ஒருபோதும் நாம் மறக்க விடமாட்டோம். […]

தேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..

தேச விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் அனுட்டிக்கப்பட்டது. இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.

அதிமுகவை தினகரனால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாது-ஒபிஎஸ்

அதிமுகவின் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார். அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

வவுனியாவில் நடைபெற்ற அன்னை பூபதி நினைவுநாள் ஆர்ப்பாட்ட பேரணி

அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது. வவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இவ்வார்ப்பாட்ட பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது. இதன்போது காணாமல்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, […]

புலிகளின் படத்திற்கு லைக் போட்டவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பளையைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவரே நேற்று (18) வியாழக்கிழமை விசாரணைக்குட்படுத்தப்பட்டார். முகநூல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றை லைக் செய்தமை தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகமான நான்காம் மாடியில் முன்னிலையாகுமாறு முன்னாள் போராளிக்கு தெல்லிப்பளைப் பொலிஸாரால் அழைப்புக் கடிதம் […]

ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா

2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் […]

அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார். சமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது […]

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 […]

மீண்டும் தமிழரசு தலைவராகின்றார் மாவை?

இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவராக மீண்டும் மாவை சேனாதிராசா தெரிவாகவுள்ளார்.புதிய தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதித்தினமான இன்றுவரையும், மாவை சேனாதிராசாவின் பெயர்மட்டுமே முன்மொழியப்பட்டுள்ளதாலேயே அவர் தெரிவாகவுள்ளார். தமிழ் அரசுக்கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 26,27,28ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் புதிய தலைவர், செயலாளர் தெரிவும் இடம்பெறவுள்ளது. தலைவர் பதவியில் மாற்றம் வரலாமென்ற தகவல்கள் வெளிவந்தபோதும், பின்னர், மீண்டும் பதவியில் தொடர மாவை சேனாதிராசா விரும்பியதையடுத்து, அவரது பெயரே மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கட்சியின் விதிமுறைகளிற்கமைவாக […]

முகமாலையில் கண்ணிவெடியில் சிக்கி இரு பெண்கள் படுகாயம்!

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். த ஹலோ ரஸ்ட் (The Hallo Trust) மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடியில் சிக்கியுள்ளனர். இன்று காலை முதல் முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி […]

கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் […]

தமிழரசுக் கட்சிக்குள் வாரிசு அரசியல்?

தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக மாவை சேனாதிராஜாவின் மகனைக் கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கட்சிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சுமந்திரன் அணி சரவணபவன் அணி சிறிதரன் அணி மாவை அணி என நான்கு அணிகளாககப் பிரிந்து தமது அணியைச் சேர்ந்தவரையே இளைஞரணிச் செயலாளராக கொண்டுவரவேண்டும் என மல்லுக்கட்டிவருகின்றனர். வெளிநாட்டில் ஓடி ஒழித்துவிட்டு திடீரென அரசியலுக்குள் நுளைக்கப்பட்ட மாவையின் மகனுக்கு இளைஞரணி செயலர் பதவி கொடுப்பது நீண்டகாலமாக கட்சிக்கு விசுவாசமாக ஊரில் […]