அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடப்பட்டுள்ள தமிழர்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது! – இரா.மயூதரன்.

பௌதீக ரீதியாக ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும், உயிரிப்பறிப்பு, அங்கவீனமாக்குதல், வலிந்து காணாமல் ஆக்குதல் என்ற அடிப்படையில் ஒருபோதும் இட்டுநிரப்ப முடியாதளவிற்கு பேரழிவுகளையும், பெருந்துயரத்தையும் தந்துசென்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து மீண்டெழுவதற்கு போராடித்துடித்துக் கொண்டிருக்கும் தமிழர்களை, அரசியல் முள்ளிவாய்க்காலை நோக்கி தள்ளிவிடுவதற்கான கால்கோள் விழாவாக சிறிலங்கா சனாதிபதித் தேர்தல்-2019 அமைந்துவிட்டது. இதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் அரசியல் தலைமைகளே ஏற்கவேண்டும். தமிழ் மக்களின் எதிர்காலத்தையும், தமிழர் தேசத்தின் இருப்பையும் அடிப்படையாக கொண்டு சரியான திசைவழியை காட்டாது ஆளுக்கொரு முடிவெடுத்து தத்தம்பாட்டில் […]

தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலியுள்ள தமிழ்த் தலைமைகளின் முடிவுகள்! – இரா.மயூதரன்.

தமிழ் மக்களை, தமிழ் மக்களின் நிலையில் நின்று தமிழர் தேசத்தின் நோக்கு நிலையில் நின்று வழிநடாத்தவல்ல நேரிய தலைவனில்லாத சூழமைவில் நடைபெறும் மூன்றாவது சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியத்தில் இருந்து சிங்கள தேசியத்திற்குள் தமிழ் மக்களை கரைத்துவிட வழிகோலும் வகையிலேயே இன்றைய தமிழ்த் தலைமைகளின் முடிவுகள் அமைந்துள்ளது. சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது குறித்தது குறித்தவாறு 2019 இறுதியில் ஏதோவொரு தினத்தில் நடக்கும் என்பது 2015 சனவரி 8 இல் மைத்திரி […]