டெலோவிலிருந்து முளைக்கின்றது புதிய கட்சி?

இரண்டு வாரத்தில் புதிய தமிழ் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சட்டத்தரணி என்.சிறீகாந்தா அறிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கருத்து வெளியிடுகையில் கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை விடுத்திருந்தார். அண்மையில் ஜனாதிபதி தேர்தலில் சஜித்தை ஆதரிக்க கட்சி தலைமை முற்பட சிறீகாந்தா தரப்பு தனித்து பயணித்திருந்தது. இந்நிலையில் தனித்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டிருந்த கே.சிவாஜிலிங்கத்தை சிறீகாந்தா தரப்பு ஆதரிக்க […]

ஶ்ரீகாந்தா முடிவு: அதிகரிக்கும் தமிழ்க் கட்சிகளின் எண்ணிக்கை

ரெலோவின் முன்னாள் செயலாளர் நாயகம் என்.சிறிகாந்தா தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் பொறுப்பிலிருந்து சிறிகாந்தாவை இடைநிறுத்துவதென நேற்று முன்தினம் ரெலோ தலைமைக்குழு முடிவெடுத்தது. அது குறித்த கடிதம் நேற்று அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிய சிறிகாந்தா, புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளார். இதில் ரெலோவின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் பலர் இணைந்து கொள்வார்கள் என தெரிகிறது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் […]