ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகி, எங்கள் பெண்கள், எங்கள் சகோதரிகள், எங்கள் மக்கள் படுபயங்கரமாக, குரூரமாகக் கொலை செய்யப்பட்டனர். ஏதிலிகளாக வந்த அவர்களைப் பற்றி இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை, அவர்கள் குடி உரிமையைப் பற்றி யோசிக்கக்கூட இவர்களுக்கு மனம் இல்லை. இரத்தம் தோய்ந்த கரங்களோடு வந்த இலங்கை அதிபரோடு கை குலுக்கி, கொஞ்சிக் குலாவத்தான் உங்களுக்கு நேரம் இருந்தது. ஈழத்தமிழர்களைப் பற்றி உங்களுக்குக் கவலை இல்லை. இந்தச் சட்டத்தை, வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள். இவ்வாறு […]
Author: இலக்கியன்
மீண்டும் வேட்டையாடப்படும் முன்னாள் போராளிகள்?
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேசத்தில், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் நால்வர் சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மூதூர், சம்பூர் பகுதிகளில் நேற்று முன்தினம், இவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டைப்பறிச்சான் தெற்கு, இறால்குழி, மகிழ்ச்சேனை பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும் புனர்வாழ்வு பெறாத முன்னாள் போராளிகள் என தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து இரண்டு உந்துருளிகளும் மீட்கப்பட்டன. […]
விக்கினேஸ்வரன் தலைமை மாற்று அணியில் ரெலோ, புளொட் இணைவா?
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாகும் மாற்று அணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது தமிழரசுக் கட்சியின் அண்மைய கால செயற்பாடுகள் மற்றும் கொள்கை நிலைப்பாடுகளில் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் கடும் அதிருப்பதியடைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பில் இந்த இரண்டு கட்சிகளும் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டிருக்கின்றனர். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி […]
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது!
ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை அவர் மக்களவையில் விழுப்புரம் எம்.பி. டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலின்போது தெரிவித்தார். இன்று மக்களவையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான டி.ரவிக்குமார் ஈழத் தமிழர் பிரச்சினையில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தார். அதில் அவர், ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை […]
சுவிஸ் தூதரக ஊழியரிடம் துருவித் துருவி விசாரணை
அண்மையில் கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் ஊழியரான காலியா பரிஸ்டர் பிரான்சிஸ் இன்று (09) மாலை 4 மணிக்கு மீண்டும் சிஐடியில் ஆஜராகிய நிலையில் 10 மணி வரை 6 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. நாளை (10) மீளவும் அவர் சிஐடியில் ஆஜராகவுள்ளார். முன்னதாக இன்று மதியம் சிஐடியில் ஆஜராகிய நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக கொழும்பு பெண் சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறித்த […]
நான் பதவி விலகுவது என் இஸ்டம்
நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனால் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும் பதவி விலக வேண்டுமென்று தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், இவ்வாறான கருத்துக்களை எங்கள் மீது […]
“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020
“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020
பிரியங்க பெர்னான்டோ தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய வாய்ப்பு
புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அந்த தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி இந்த மேன்முறையீட்டை பிரியங்க பெர்னான்டோ தாக்கல் செய்யலாம் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தின் முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, புலம்பெயர் தமிழர்களை கழுத்தை அறுக்கும்” சைகையை காட்டி அச்சுறுத்தியதாக அவர் […]
வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. கிளிநொச்சி – இரணைமடுக் குளம் நிரம்பும் நிலையில் அதன் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் முத்தையன் கட்டுக்குளம் உள்ளிட்ட பல குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தினாலும், குளங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுளள்ளதாலும், இரண்டு மாவட்டங்களிலும் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 22 ஆயிரம் பேர் வரை […]
என்கவுண்டர் விவகாரம் : தன்னையும் கொன்றுவிடுங்கள் என கர்ப்பிணி பெண் கோரிக்கை!
பாலியல் வன்புணர்விற்கு பின் படுகொலை செய்யப்பட்ட பிரியங்கா ரெட்டியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட சின்னகேசவலு என்பவரின் கர்ப்பிணி மனைவி தன்னையும் கொன்று விடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் குறித்த பெண் நேற்றைய தினம் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள. தன் கணவன் இன்றி தன்னால் வாழ முடியாது எனத் தெரிவித்துள்ள குறித்த பெண், சின்னகேசவலுவின் உடலை […]
தொடர்கின்றது அடைமழை:பாதிப்பு அதிகரிக்கலாம்?
வடக்கு மாகாணத்தில் கொட்டுத் தீ்ர்த்த அடை மழை காரணமாக வடக்கின் 5 மாவட்டங்களுலும் 17 ஆயிரத்து 598 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயி்த்து 676 பேர் பாதிப்படைந்துள்ளதோடு ஆயிரத்து 914 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 430 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் உறுதி செய்கின்றன. தற்போது நிலவும் பருவ மழையின் காரணமாக அதிக நீர் வரத்தின் காரணமாக வடக்கின் பாரிய நீர்த்தேக்கமான இரணைமடுக் குளத்துன் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையிலும் ஏனைய குளங்களும் […]
கழுத்தறுப்பு சர்ச்சை பிரிகேடியர் குற்றவாளி
தமிழர்களுக்கு கழுத்தறுப்பு சைகை காட்டிய வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பிரித்தானிய நீதிமன்றில் இன்று (06) நிரூபிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு லண்டன் உயர்ஸ்தானிகர் அகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களை நோக்கி கழுத்தை அறுப்பேன் என்று சைகை காட்டி கொலை அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்குள் பிரியங்கா பெர்னாண்டோ சிக்கியிருந்தார். அவருக்கு எதிரான வழக்கு பிரித்தானிய நீதிமன்றத்தில் நீண்டகாலம் விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என்பது பொது ஒழுங்குச் சட்டத்தின் கீழ் […]










