தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ், தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது. எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை […]
Category: செய்திகள்
சீனா – சுவிஸை தொடர்ந்து பயண எச்சரிக்கையை தளர்த்தியது இந்தியா!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் இலங்கை தொடர்பாக விடுக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையை இந்தியா தளர்த்தியுள்ளது. புது டில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை மற்றும் பாடசலைகள் மீண்டும் திறக்கப்பட்டமை ஆகியவற்றால் இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கைக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் கவனமாகவும் அவதானத்துடனும் இருக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும் இலங்கையில் எந்தவொரு உதவி தேவைப்படினும் […]
தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய அரசாங்கத் தலைவர் மைத்திரி-சிறிதரன்
தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி, சிங்கள மக்கள் மத்தியிலும் ஒரு ஏமாற்றுக்காரராகத் தன்னைச் சித்தரித்துக் கொண்டுள்ள ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் எதிர்காலம் இத்தோடு முடிவடைந்து விட்டது. இனிவரும் காலங்களில் அவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினராகக் கூட மக்கள் தெரிவு செய்ய மாட்டார்கள்.அத்துடன் இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே, அவசரகாலச்சட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் நீக்கப்படும் என்றும், அவர் கூறியுள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார். அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி,ஈ அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளின் தூதுவர்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். உடனடி பாதுகாப்பு நிலைமைகளைக் […]
வைகோ அண்ணன் போனால் மகிழ்ச்சியே-சீமான்
இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால் தனக்கு மகிழ்ச்சியே என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தமிழக தொலைக்காட்சிக்கு தேர்தல் முடிவுகளின் பின் வழங்கிய நேர்காணலில் வைகோ அண்ணா மாநிலங்கள் அவை உறுப்பினராக பாராளுமன்றம் போனால் மகிழ்ச்சிதான், அரசியல் ரீதியாக கருத்து மாறுதல்கள் இருந்தாலும் அவர்மேல் என்றும் மரியாதை இருக்கு, அவரும் அவரின் தொண்டர்களும் தமிழக பிரச்சனைகளில் முன்னின்று போராடுறவங்கள், […]
வெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக!
உலகெங்கும் உள்ள சட்டத்தின் ஆட்சியில் தண்டனை பெற்றவர்களைத் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலை செய்வதும் ஒரு பகுதியாகும். அண்மையில் இலங்கையில் ‘புத்தபூர்ணிமா’ எனப்படும் வைகாசி விசாகச் சிறப்பு நாளில் 762 தண்டனைவாசிகளை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது ஓர் எடுத்துக்காட்டாகும். இதை எல்லாம் அறியாமல் அடிக்கடிச் சிலர் “கொலையாளிகளை விடுதலை செய்யலாமா” என்கின்றனர். எழுவர் விடுதலைக்கு நீதிமன்றம் குறுக்கே நிற்கவில்லை. ஏனெனில் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்வதில் அது தலையிடாது. அவ்வாறிருக்க ஆளுநர் தமிழக அரசின் […]
பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைக் கண்டித்து போராட்டம்
தமிழ்த் தேசிய இனத்தின் ஆணிவேராகிய எமது தேசியத்தலைவரையும் அவரின் தலைமையிலான எமது விடுதலைப்போராட்டத்தையும் அதன் இறுதி இலக்காகிய சுதந்திர தமிழீழத்தையும் இழிவுபடுத்தி, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (British Broadcasting Cooperation – BBC) தமிழ்ப்பிரிவானது, 18 – 05 – 2019 அன்று, அதாவது எமது இனவழிப்பின் 10 வருட, கொடுந்துயரம் நிகழ்த்தப்பட்ட அதே நாளில், திட்டமிட்டபடி வலிந்து, உண்மைக்குப் புறம்பான மற்றும் வரலாற்றை திரிபுபடுத்தக்கூடிய இரண்டு காணொளிகளை, தமது முகப்புத்தகத்தில் (BBC News தமிழ்) வெளியிட்டிருந்தார்கள். […]
சிறிலங்காவுடன் புதிய இராணுவ உடன்பாடு இல்லை- என்கிறது அமெரிக்கா
சிறிலங்காவுடன், புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும், 1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா முற்படுவதாகவும், அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பேச்சாளர் ஒருவர், ‘1995ஆம் ஆண்டு செய்து கொண்ட உடன்பாட்டில், சில திருத்தங்களை செய்வதற்கு மாத்திரம் அமெரிக்கா கோரியுள்ளது. அமெரிக்க இராணுவத்தினரும், பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த சிவிலியன்களும் எவ்வாறு சிறிலங்காவுக்குப் பயணம் செய்ய முடியும் என்பதை இது […]
தமிழர்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்!
அவரசகாலச் சட்டத்தினால் தாமும் தமிழ் மக்களுமே பல்வேறு பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். தமிழர்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம் உள்ளன. தமிழர்கள் பலர் சிறையில் வாடுகின்றனர். ஞானசார தேரர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளபோதும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். முன்னாள் போராளிகள் தமது குடும்பங்களுடன் இணைந்துவாழ்வதற்கான நல்லெண்ணத்தை ஏன் அரசாங்கத்தினால் வெளியிட முடியாதுள்ளது. கன்னியா வெந்நீர் ஊற்றுப் பிரதேசத்தில் அமைந்திருந்த […]
தனி பெரும்பான்மையுடன் குடியரசு தலைவரை சந்தித்தார் மோடி
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார். மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்திய ஆட்சியை பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2ஆவது முறையாக நரேந்திர மோடி வரும் 30ஆம் திகதி பதவியேற்கிறார். தனி பெரும்பான்மை பலத்துடன், […]
அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை-மாவை சேனாதிராஜா
ஈஸ்டர் தின தாக்குதலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை தொடர்ந்து ஒரு மாதக் காலத்திற்கு நீடிப்பது தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றுகையில் ஐ.எஸ். செயற்பாடுகளுக்கு எதிராக அவ்வமைப்பை அழித்தொழிக்கும் நோக்கில் இப்பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.ஆனால், இதனை பயன்படுத்தி முஸ்லிம், சிங்கள மக்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தைவிட, வடக்கிற்கே அதிக நெருக்கடி கொடுக்கப்படுகிறது. எனவே, அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு ஆதரவளிக்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா […]
வடக்கு கிழக்கு மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா குழு அமைக்க கோரிக்கை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் கண்காணிப்பு குழு ஒன்றை இலங்கையில் அமைக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பெருமளவில் இராணுவம் குவிக்கப்பட்டு தமிழர் நிலங்களில் இராணுவ அனுசரனைகளுடன் குடியேற்றங்கள் நடைபெறுவதாகவும் பௌத்த மேலாதிக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்தும் நடவடிக்கைகள் […]











