மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், அதாவது சுமார் 15 இலடசம் வாக்குகள் என்று கணிக்கப்பட்டுள்ளது, சில தொகுதிகளில் மூன்றாம் நிலையும் பல இடங்களில் நான்காம் நிலையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.
Category: செய்திகள்
யாழ் மாவட்டச் செயலக சூழலில் நடமாடிய இஸ்லாமிய இளைஞன் கைது
யாழ்.மாவட்ட செயலக சுற்றாடலில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய தும்மலசூாிய பகுதியை சோ்ந்த இஸ்லாமிய இளைஞா்கள் ஒருவா் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளாா். யாழ்ப்பான மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஓர் இளைஞன் நடமாடியுள்ளார். குறித்த இளைஞன் மாவட்ட செயலக சூழலில் பல தடவைகள் அங்கும் இங்குமாக திரிந்துள்ளார். அவ்வாறு நீண்டநேரமாக நடமாடிய இளைஞனை கண்ட சிலர் யாழ்ப்பாணம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து மாவட்ட செயலகத்துக்கு வந்த பொலிஸாா். குறித்த இளைஞனை […]
கற்றல் செயற்பாடுகளைப் புறக்கணிக்கவுள்ளது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!
இன்று முதல் கற்றல் செயற்பாடுகளை புறக்கணிக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த ஒன்றியத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துனரின் வழக்கு விசாரணைகளை நிறைவுறுத்தல் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த விடயங்களுக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது. இந்த கற்றல் செயற்பாடு புறக்கணிப்புக்கு ஏதேனும் ஒரு வழியில் தடை […]
பதவி விலகத் தயார்-ரிஷாட் பதியுதீன்
எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டால் நான் எனது பதவியிலிருந்து விலகத்தயாராக இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் !
எனது வீட்டில் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த எனது குடும்பத்தினரை மிரட்டி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அச்சறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், கடந்த 18 ஆம் திகதி சனிக்கிழமை […]
தமிழின அழிப்புக்கு நீதிகோரி பேர்லினில் நடைபெற்ற பதாகை கண்காட்சி
தமிழின அழிப்பு நாள் மே 18 நினைவாக நேற்றைய தினம் யேர்மன் தலைநகரில் பிரசித்திபெற்ற தேவாலயத்திற்கு முன்பாக தாயக மக்களுக்கு நீதிகோரி பதாகை கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்க நிகழ்வும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் பாரிய பதாகைகளில் பல்லின மக்களுக்கு இச் செய்தியை கொண்டுசெல்லும் முகமாக வாசகங்கள் யேர்மன் மொழியிலும் , ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டது. இளையோர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. மே-18 என்பது நாம் கூடியழுவதற்கான நாள் மட்டும் அல்ல. மாறாக, திட்டமிட்டு இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்ட […]
கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர ஜெயசேகர அவர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றது. குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு இராணுவக் கட்டளைத் தளபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது அண்மையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து மாவட்டத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக தற்போதைய சூழ்நிலையில் மக்கள் செயற்பட வேண்டிய விதங்கள் தொடர்பாக இராணுவ அதிகாரிகளினால் தெளிவுபடுத்தப்பட்டது. அத்துடன் பாடசாலைகள், ஆலயங்களின் […]
வடமராட்சி கிழக்கில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் பலி
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு அவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று சக தொழிலாளர்கள் தெரிவித்தனர். கட்டைக்காடு முள்ளியானைச் சேரந்த 38 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை கட்டைக்காட்டைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் கடந்த வெள்ளிக்கிழமை ஆழ்கடலில் சுழியோடிய போது உயிரிழந்தார்.
ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான தீர்மானம்! ஆராய்ந்தே முடிவெடுக்கப்படும்!
அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில், ஆராய்ந்தே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்று கருத்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
யாழில் வடக்கு மக்களின் தீவிர எதிப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் அகதிகள்!
வடக்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி இரண்டாம் கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாணத்திலும் வெளிநாட்டு அகதி கள் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் யாழில் உள்ள சில வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நீர்கொழும்பில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகளே இவ்வாறு வடக்குக்கு தற்போது அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்படுகின்றனர். குறித்த வெளிநாட்டு அகதிகள் இரகசியமான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லையெனவும் தெரியவந்துள்ளது.யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பதிவுகளை […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 89 பேர் கைது
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இது வரையில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் 69 பேர் குற்றவியல் விசாரணை பிரிவிலும் 20 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவிலும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யேர்மனியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நிகழ்வு-2019
யேர்மனி டுசில்டோர்வ் நகரில் மே 18 அன்று தமிழின அழிப்புநாள் 2019 மிகச்சிறப்பாக நடைபெற்றது. டுசில்டோர்வ் நகரத்தின் புகையிரதநிலயத்திற்கு முன்புறமாக உள்ள வீதியில் கறுப்பு உடைகள் அணிந்து அணிதிரண்ட மக்கள். கறுப்பு நிற பலூன்களில் இன அழிப்பு சம்பந்தமமான கோசங்களை எழுதி ஒவ்வொருவரும் தங்களின் கைகளில் ஏந்தியபடியும், பாதாதைகளையும் ஏந்தியபடியும் ஊர்வலமாக இம் மாநிலத்தின் பாராளுமன்றம் நோக்கிப் புறப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாகச் சென்ற மக்கள் இரண்டரை மணித்தியாலங்களின் பின்பு டுசில்டோர்வ் பாராளுமன்றத்தை வந்தடைந்தனர். அத்திடலில் […]











