கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது, சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் அவிசாவளையில் உள்ள […]
Category: செய்திகள்
பலரின் பதவிகளை பறிக்கவுள்ள மைத்திரி-நாளை வெளியாகிறது அறிவிப்பு!
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளது என சிறீலங்கா அதிபர் மைத்திரி பால சிறீசேனா தெரிவித்துள்ளார். இன்று மாலை நாட்டு மக்களுக்கு அவர்கள் வழங்கிய உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பாதுகாப்புத்துறையில் உள்ள அதிகாரிகளே இவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படவுள்ளனர் என மைத்திரி மேலும் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளார்.
தனது மதத்தின் பெயரால் இந்த தாக்குதலை நடத்துகிறேன் – தற்கொலைக் குண்டுதாரி தாயாருக்கு எழுதிய மன்னிப்புக் கடிதம் சிக்கியது
கொழும்பு- தெமட்டகொடவில் மகாவில கார்டனில் உள்ள வீட்டில், இருந்து தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தனது தாயாருக்கு எழுதிய கடிதம், கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல், தாக்குதல் நடத்திய நபர்களால் பயன்படுத்தப்பட்ட தெமட்டகொட மகாவில கார்டனில் உள்ள வீட்டை, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் சிறப்பு அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டனர். அப்போது, அங்கிருந்த ஒரு தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்தார். அதில், மூன்று காவல்துறை அதிகாரிகளும், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளும் […]
10 நிமிடங்களுக்கு முன்னரும் கொடுக்கப்பட்ட புலனாய்வு எச்சரிக்கை
சிறிலங்காவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன என்று சிறிலங்கா அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. கொழும்பில் நேற்று அலரி மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்தார். “தாக்குதல் நடத்தப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகக் கூட, உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை வெளிநாட்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏப்ரல் 4ஆம் நாள் தொடக்கம், இந்த புலனாய்வு எச்சரிக்கைகள் காலத்துக்குக் காலம் சிறிலங்கா அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. […]
கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் மீட்பு
கிளிநொச்சியில் 16 மோட்டார் குண்டுகள் கிளிநொச்சி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட விடுதலை புலிகளின் பெண்கள் பயிற்சி முகாம்களிலிருந்தே, குறித்த மோட்டார் குண்டுகள் கிடைக்கப்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸாரால் அங்கு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதே, இந்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்டு நடத்தியது ஐ.எஸ்! ஆதாரம் படங்கள் வெளியாகியுள்ளது!
இலங்கையில் நடந்த தாக்குதலை திட்டமிட்டு வழி நடத்தியது ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்று தெரிய வந்துள்ளது. நேற்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இணையம் ஒன்றில் மூன்று தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் படம் வெளியிடப்பட்டது. அந்த படங்களில் அபு உபைதா, அப்துல்பாரா, அப்துல் முக்தர் ஆகிய 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் உள்ளனர். அவர்கள் ஐ.எஸ். கொடிகளை பிடித்தப்படி நிற்கிறார்கள். இவர்கள் மூவரும் கொழும்பில் தாக்குதல் நடத்திய தற்கொலை படையில் இடம் பெற்று இருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியர்கள் மூவர், போர்த்துக்கல் நாட்டவர் ஒருவர், துருக்கியர்கள் இருவர், பிரித்தானியர்கள் மூவர், பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாமல் 25 […]
குண்டுவெடிப்புகளில் பலியானோர் தொகை 290 ஆக உயர்ந்தது
சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. கொழும்பில் 1000 இராணுவத்தினர் இந்த தாக்குதல்களை அடுத்து, கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1000 இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 24 கைது நேற்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் […]
தெமட்டகொட குண்டுவெடிப்பில் 3 சிறிலங்கா காவல்துறையினர் பலி
தெமட்டகொட பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் மூவர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தெமட்டகொடவில் உள்ள மகாவில வீடமைப்புத் திட்ட, அடுக்குமாடிக் குடியிருப்பில், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இடம் ஒன்றை சோதனையிட முயன்ற போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்த போது அங்கிருந்த தற்கொலைக் குண்டு தாரி என சந்தேகிக்கப்படும் நபர் குண்டை வெடிக்க வைத்துள்ளார். இதில் மூன்று காவல்துறையினர் உயிரிழந்தனர். இன்றைய குண்டுத் […]
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்துக்குள் 26 சடலங்கள்
கொழும்பு- கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வளாகத்தில் 26 பேரின் சடலங்கள் கிடப்பதாக சிறிலங்கா காவல்துறையினரை மேற்கொள்காட்டி, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட பின்னர் அவர் இந்த தகவலை வெளியிட்டார். தாம் பெரிதும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், சிறிலங்கா பிரதமர் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புகளில் 9 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 185 பேர் பலி – 469 பேர் காயம்
சிறிலங்காவில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில், 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிந்திக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பில் மூன்று ஆடம்பர விடுதிகளிலும், கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஆகியவற்றில், ஒரே நேரத்தில் இன்று காலை குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, 469 என்று மருத்துவமனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் […]
தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் – விசாரணைகளில் தெரியவந்தது
சிறிலங்காவில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கொழும்பில் ஷங்ரி-லா விடுதியில் நேற்று இரண்டு பேர் 616ஆவது இலக்க அறையில் தங்கியுள்ளனர். குறித்த இரண்டு சந்தேக நபர்களுமே இன்று விடுதியின் உணவகப் பகுதி மற்றும் மண்டபத்தில் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்பது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருந்து தெரிய வந்துள்ளது. ஷங்ரி- லா விடுதி குண்டுவெடிப்புக்கு 25 கிலோ எடையுள்ள சி-4 […]











