இலங்கை அரசு புலிகளதும் இராணுவத்தினதும் போர்க்குற்றங்களை பொதுமன்னிப்பளிப்பது தொடர்பில் பேசி வருகின்ற நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் விடுதலைப் புலிகள் பேரில் சிலரை அங்கு அனுப்பி வைக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் சிலரை சாட்சியமளிப்பதற்கென ஜெனீவாவிற்கு அனுப்பி வைக்கவுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்துள்ளார். “யுத்தத்தில் ஈடுபட்ட தரப்பான இராணுவம், விமானப்படை அதிகாரிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். […]
Category: செய்திகள்
பாகிஸ்தானுக்கான இலங்கை விமான சேவை தற்காலிகமாக இரத்து!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் காரணமாக விமான சேவையை நிறுத்தி வைப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானிய வான்வழி பயணங்களை பாகிஸ்தான் மூடியுள்ள நிலையில், கராச்சி மற்றும் லாகூருக்கு நாளை (வியாழக்கிழமை) செல்லவிருந்த விமானங்களே தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி மற்றும் லாஹூர் நோக்கி செல்வதற்கு தயாராகவிருந்த பயணிகள் தங்களின் விமான பயணச்சீட்டிற்கான முகவர்களை தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு செயற்படுவதாகவும் ஶ்ரீலங்கன் விமான […]
யாழில் திருட்டுக் குற்றச்சாட்டில் இருவர் கைது!
யாழ்ப்பாணம், மடத்தடியில் கடந்த வாரம் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மடத்தடியில் வீட்டில் யாருமில்லாத பகல் நேரத்தில் வீட்டுக்குள் புகுந்து மூன்று பவுண் தங்க நகை மற்றும் பணம் என்பவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய யாழ். மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி ஜெரோசன் தலமையிலான குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, நாவற்குழியைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இருவர் […]
மரண தண்டனை விவகாரம் – மைத்திரியின் கருத்திற்கு ஐ.நா. மறைமுகத் தாக்கு!
போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்திற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரெஸ் மறைமுகமாக தாக்கியுள்ளார். போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இலங்கை மரண தண்டனையை நிறைவேற்றும் நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதாக, பல மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு பல மனுக்களை கையளித்துள்ளன. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமை […]
கிளிநொச்சி போராட்டத்தில் அடிதடியில் ஈடுபட்ட அடியாட்கள்!
கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து, மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால் பல்கலைகழக மாணவன் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர். அறிவிப்பு பணியில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சேதமாக்கப்பட்டு, ஒலிவாங்கி வயர்கள் அறுத்தெறியப்பட்டன. இந்த அநாகரிக நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குண்டர்களே ஈடுபட்டதாக பல்கலைகழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்துவது குறித்து பல்கலைகழக […]
முழு அடைப்புப் போராட்டத்திற்கும் ஆதரவாக மன்னார் மாவட்டம்!
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (25) கிளிநொச்சியில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளது.வர்த்தகர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். மன்னாரில் இருந்து அரச மற்றும் தனியார் பேரூந்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதோடு,எவ்வித சேவைகளும் இடம் பெறவில்லை. பாடசாலைகளுக்கு குறிப்பிட்ட அளவு மாணவர்கள் சென்றுள்ள போதும், போக்குவரத்து சேவைகள் இல்லாமையினால் அதிகளவான மாணவர்கள் மற்றும் […]
சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்!
இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு […]
ஹர்த்தாலிற்கு தமிழரசு எதிர்ப்பு ?
எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழரசுக் கட்சி மௌனம் காத்து வருகிறது. ஜெனிவாவில் வரும் திங்கட்கிழமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதில் சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுக்குமாறு வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியாக முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. வரும் திங்கட்கிழமை இந்தப் […]
வர்த்தர்களுக்கு முன்னாள் முதல்வர் அழைப்பு
வடகிழக்கில் வசிக்கும் உங்களில் பலர் எமது “எழுக தமிழ்” நிகழ்வுகளின் போது உங்கள் கடைகள், வியாபார நிலையங்கள் போன்றவற்றை மூடி எம்முடன் ஒருங்கிணைந்து எமது குறிக்கோள்களுக்காக உங்கள் ஆதரவைக் காட்டி வந்துள்ளீர்கள். உங்கள் நிறுவனங்களை மூடுவதால் உங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, வணிகத் தளர்ச்சி போன்றவற்றையும் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் நாம் அறியாதவர்கள் அல்ல. எனினும் எம் தமிழர்களின் விடிவை நோக்கிய எமது பயணத்தில் இந்தக் காலமானது மிக முக்கியமானதொன்று. இலங்கை சம்பந்தமாக 2015ம் ஆண்டில் […]
வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் ஆகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட,கிழக்கு இணைப்பை நாம் ஏன் கோருகின்றோம் என்று அவர்’ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். வடகிழக்கு இணைப்பை ஏன் கோருகின்றோம்? “வடக்கும் கிழக்கும் இப்பொழுது கூட பெரும்பான்மையாக தமிழ்ப் பேசும் பிரதேசங்களே. வவுனியாவில் உள்ள எமது சகோதர இனம் நன்றாகத் தமிழ் பேசுவார்கள். […]
பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு!
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி நடைபெறவுள்ள கதவடைப்பு மற்றும் பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினால் தமது உறவுகளுக்கு நீதி கோரி நடாத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு மற்றும் கவனீயர்ப்பு பேரணிக்கு எமது கட்சி […]
தினகரனின் திட்டம் தான் என்ன? தனித்து சாதிப்பாரா தினகரன்?
ஆக கடைசியில இப்போது தனித்து விடப்பட்டுள்ளவர் டிடிவி தினகரன்தான் போலிருக்கிறது. கட்சியை இரண்டாக உடைத்து வெளியேறியபோது ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பி கொண்டே இருந்தார் தினகரன். தொடர்ந்து ஆர்.கே.நகர் வெற்றி வந்ததும் அவர் மவுசு கூட ஆரம்பித்தது. ஆனால் அந்த திருஷ்டியோ என்னவோ தொடர்ந்து சறுக்கல்கள், ஏமாற்றங்கள், பிரச்சனைகள் என்று வரிசை கட்டி வந்தன. திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் உள்பட எல்லா இடங்களிலும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். மக்களை சந்தித்து நேரடியாக உரையாற்றினார். இதன் காரணமாகவும் இவரது பேச்சின் தன்மை, […]












