பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து மாணவ மாணவியர் மதிப்பளிப்பு!

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு சுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்து பட்டம் பெற்ற மாணவ மாணவியர் மதிப்பளிப்பு நிகழ்வு நந்தியார் பகுதியில் 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 16.00 மணிக்கு இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு துணைப்பொறுப்பாளர், திரு.பொன்மலை அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை கேணல் பருதி அவர்களின் தாயார் ஏற்றிவைத்தார்;. மலர்வணக்கத்தை கேணல் பருதி அவர்களின் சகோதரன் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆரபி, அனோஜினி, கரிகரணி, திசானிகா, சூரியா,சோனா, அமலினி ஆகியோர் கேணல் பருதி, மாவீரர் நினைவு சுமந்த பாடல்களை வழங்கிச் சிறப்பித்திருந்தனர்.
குசன்வீல் தமிழ்ச்சோலை, சேர்ஜி தமிழ்ச்சோலை, கவின்கலையகம் ஆகிய மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனங்கள், பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த செல்வி ஜக்சன் ஆன்ஜெனிபர் அவர்களின் கவிதை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பைச்சேர்ந்த திருமதி யசோதா அவர்களின் நினைவுரை, பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உருவாக்கத்தில் ‘ஊசி” என்னும் சிறப்பு நாடகம் போன்ற நிகழ்வுகள் சிறப்பாக அமைந்திருந்தன.
இந்நிகழ்வில் சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில், கேணல் பருதி அவர்களை நினைவுகூர்ந்ததுடன் குறித்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

உணர்வுபூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரான்சு மண்ணில் உயர்கல்வியை முடித்து பல்வேறு துறைகளிலும் பட்டம்பெற்ற 11 தமிழ் மாணவ மாணவியர் மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான மதிப்பளித்தலை கேணல் பருதி அவர்களின் தாயார் வழங்கியிருந்தார்.

ஜெயபாலன் ஜெனனி, காணிக்கைநாதன் ஜெனின், மகேந்திரராஜா சபீதா, சிறிரஞ்சன் ஆரணி, பாலச்சந்திரன் தனுசன், தயாபாலன் ஜீவிதன், விஸ்ணுசிங்கம் அன்னாபெல், விஸ்ணுசிங்கம் இசபெல், உதயகுமார் றாசன்ஜா, அரியரட்ணம் துவாரகா, கமலேந்திரன் அஸ்வினி ஆகியோரே சான்றிதழ், நினைவுப்பதக்கம் வழங்கி மதிப்பளிப்புச் செய்யப்பட்டிருந்தனர்.
நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து ஓய்ந்ததும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவு கண்டது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்