தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை வெளியேற்ற ஆலோசனை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.தமிழரசுக் கட்சியின் தமிழர் விரோத நிலைப்பாடு மற்றும் எதேச்சதிகாரப் போக்கு ஆகிய காரணங்களினால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கனவே வெளியேறியிருந்தன.தற்போது உள்ளூராட்சி தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக தமிழரசுக் கட்சி கடைப்பிடித்துவரும் இறுக்கமான நிலையால் அதிருப்தி அடைந்துள்ள ரெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகளும் வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகித்து வெளியேறிய கட்சிகள் இணைந்து கூட்டமைப்பின் உரிமையை நிலைநாட்டுவதுடன் தமிழரசுக் கட்சியை தவிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.

ஈழதேசம் இணையம்!

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்