தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ விலகியதாக சிறிகாந்தா அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ போட்டியிடாது என்று அந்த கட்சியின் தலைமைத்துவக் குழுக் கூட்டத்தில் இன்று அதிகாலை முடிவெடுக்கப்பட்டதாக கட்சியின் செயலர் சிறிகாந்தா ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் நேற்றைய கூட்டத்தில் தமிழரசுக் கட்சியால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அடுத்த கட்டம் குறித்து ரெலோ முக்கிய பிரமுகர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த கட்சியின் தலைமைத்துவக் குழு கூட்டம் நேற்று இரவு 10 மணிக்கு வவுனியாவில் ஆரம்பமாகியது. 16 பேர் பங்கேற்ற இந்த கூட்டம் அதிகாலை 1.30 மணிவரை நீடித்திருந்தது.இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து ரெலோ போட்டியிடாது என்று முடிவெடுத்துள்ளோம். இது குறித்த அறிவிப்பை இன்று மாலை உத்தியோக பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் சிறிகாந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையம்!

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கு உள்ளூராட்சி தேர்தல் தொகுதி பங்கீடு விடயத்திலும் தொடர்வதால் புளொட்டும் வெளியேற ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே
நேற்று புதன்கிழமை இரவு கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு டெலோ அமைப்பின் தலைவரும் நாடாளமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில்
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இடையில் பல பிளவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்

*