உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது!

உதயசூரியன் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள புதிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடுவதற்காக இன்று காலை கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் மற்றும் வலிகிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் அ. ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.

குறித்த புதிய கூட்டமைப்பில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் அணி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஜனநாயக தமிழரசுக்கட்சி ஆகியன அங்கம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
என்­னைக் காய்­வெட்டி என்­னு­டன் இணைந்த பங்­கா­ளி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர் என்று குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார் தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி. “என்­னு­டன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக உருவான ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை
‘உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*