தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்!

தமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் ராஜா மற்றும் அவரது மூன்று பிள்ளைகளையும் சிறிலங்கா இராணுவத்திடம் கையளித்திருந்த நிலையில் அவர்களது விடுதலைக்காக ஓய்வில்லாது போராடிவந்த தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் 05.12.2017 அன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலக்காக முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு மகன் மற்றும் பேரப்பிள்ளைகளை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென்று தவிய்யத் தவித்து வந்த தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் இந்த ஏக்கத்துடனே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறான உயிரிழப்புகள் எமக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்திச் செல்கின்றது. எமது தேச விடுதலையை விரைந்து வென்றாக வேண்டும் என்பதையே ஏக்கங்கள், தவிப்புகளுடன் சம்பவிக்கும் இது போன்ற உயிரிழப்புகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

தேசம் காக்க, எமது சுதந்திர வாழ்விற்காக தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மற்றும் மாறா உறுதியுடன் இறுதிவரை தேசம் காக்கும் போரில் தம்மை ஈடுபடுத்தியதன் காரணமாக இருக்கிறார்களோ இல்லையா என்பது கூடத் தெரியாது போயுள்ள போராளிகளின் தியாகத்திற்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகின்றோம்…?

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
தலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்டுள்ள கேரள கஞ்சா தொகையின்
சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில் அரச அச்சகம் விசேட அதிரடிப்படையின் உச்சக்கட பாதுகாப்பின்
தான் இப்போது ஒரே ஒரு துருப்புச்சீட்டை மாத்திரமே பயன்படுத்தியிருப்பதாகவும், இன்னமும் பல துருப்புச்சீட்டுகள் தமது கைவசம் இருப்பதாகவும், சிறிலங்கா அதிபர்

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்

*