புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரி பலி

புதுக்குடியிருப்பு- கைவேலிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். புதுக்குடியிருப்பு பகுதியில் கடமையாற்றும் அவர், சைக்கிளில் சென்ற போது பின்னால் வந்த டாட்டா கப் ரக வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்