அனுராதபுர சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுடன் ஐ.நா குழுவினர் சந்திப்பு!

அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை ­யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கும் தமிழ் அர­சி­யல் கைதி­களை ஐ.நாவின் சிறப்­புக் குழு­வி­னர் சந்­தித்­த­னர்.அங்கு அவர்­கள் அவ­தா­னித்­ததை ஐ.நாவுக்கு அறிக்­கை­யி­டு­வர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அநு­ரா­த­பு­ரம் சிறை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் மூவர் தொடர் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை மேற்­கொண்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளின் வழக்கு வவு­னி­யா­வில் இருந்து அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றத் துக்கு மாற்­றப்­பட்­ட­தைக் கண்­டித்தே அவர்­கள் இந்­தத் தொடர் போராட்­டத்தை நடத்­தி­யி­ருந்­த­னர்.

அநு­ரா­த­பு­ரம் சிறைக்­குச் சென்ற ஐ.நா. சிறப்­புக் குழு அவர்­க­ளைச் சந்­தித்­தது.அர­சி­யல் கைதி­க­ளு­டன் தனித்­த­னி­யா­கக் கலந்­து­ரை­யா­டி­யது. கைது செய்­யப்­பட்­ட­மைக்­கான கார­ணம், தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள காலம், சிறை மாற்­றப்­பட்­டமை, வழக்கு நீண்­ட­கா­லம் இழு­ப­டு­வ­தற்­கான கார­ணம் எனப் பல விட­யங்­க­ளைக் கேட்­ட­றிந்­தது.

அவ­தா­னித்த விட­யங்­கள் தொடர்­பாக எதிர்­வ­ரும் 15ஆம் திகதி சிறப்பு அறிக்கை ஒன்றை இலங்கை அர­சி­டம் இந்­தக் குழு ஒப்­ப­டைக்­க­வுள்­ளது. அதன் பிரதி ஐ.நாவுக்­கும் அனுப்பப்ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்