ஐ.நாவில் உறுதியளித்த தீர்மானங்கள்; உடனடியாக நடைமுறைப்படுத்த பிரித்தானியா வலியுறுத்து!

மனித உரிமைச் செயற்­பா­டு­கள் தொடர்­பில் ஐ.நாவில் உறு­தி­ய­ளித்த தீர்­மா­னங்­களை இலங்கை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென இலங்­கைக்­கான பிரிட்­டன் தூது­வர் ஜேம்ஸ் டோரிஸ் தெரி­வித்­துள்­ளார்.

அவர் விடுத்­துள்ள கிறிஸ்­மஸ் மற்­றும் புது­வ­ருட வாழ்த்­துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளார்.

அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி சுமூ­க­மான வாழ்க்­கைக்­குத் தேவை­யான ஆணை­யையே இலங்கை மக்­கள் வழங்­கி­யுள்­ள­னர். தக­வல் அறி­யும் சட்­ட­மூ­லம் நடை­மு­றைக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசு ஏற்­ப­டுத்­­து­வ­தா­கக் கூறிய மனித உரிமை செயற்­பா­டு­கள் நடை­மு­றைக்­குக் கொண்­டு­வ­ரப்­பட வேண்­டும். காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பில் நீதி­யான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படவேண்­டும்.

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த இலங்கை அரசு சடு­தி­யான முன்­னேற்­றப் பாதையை நோக்கி நகரவேண்­டும் – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்