ஜெயலலிதாவுக்கு அடுத்து தினகரன் தான் : திருமாவளவன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இந்த மாதம் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டுமொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதற்கிடையே, இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ராணி மேரி கல்லூரியில் இன்று அமைதியான முறையில் நடந்து வருகிறது.

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். 15 சுற்றுக்கள் முடிவில் அ.தி.மு.க., தி.மு.க.வை விட 33,000 வாக்குகள் பெற்று வெற்றிக் கோட்டை நெருங்கியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு அடுத்து யார் என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் கூறுகையில், அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றிருக்கிறார். மேலும், பா.ஜ.க. ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்