மீண்டும் ஐதேகவில் இணைகிறார் ரம்புக்வெல?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கண்டியில் எதிர்வரும் ஜனவரி 12ஆம் நாள் ஆரம்பிக்கவுள்ள ஐதேகவின் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

2001-2004 காலப்பகுதியில் ஐதேக அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெல, பின்னர் மகிந்த ராஜபக்ச அரசுக்குத் தாவி அமைச்சர் பதவியைப் பெற்றார்.

அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில், அரசாங்கப் பேச்சாளராகவும் பதவி வகித்திருந்தார்.

தற்போது மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணியில் உள்ள கெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐதேகவில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்