இலங்கை வரும் ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவொன்று அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இலங்கைக்கான நட்புறவுக் குழுவின் முக்கியஸ்தரான ஜெப்ரி வேன் ஒடன், இலங்கைக்கான வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாக்கவை சந்தித்த வேளையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர் ஒன்றியத்தின் பிரதி செயலளார் நாயகத்தையும் சந்தித்துள்ளார்.
இலங்கைக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் பல்வேறு துறைகளில் மேலும் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். லக்ஷம்பேர்க் வர்த்தக சபையுடன் இராஜாங்க அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையில் வாத்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்தில் இலங்கையில் இருந்து வர்த்தகக்குழு ஒன்று லக்ஷம்பேர்க்கிற்கு விஜயம் செய்ய இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க இதன்போது தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கொழும்பு அரசியல் குழப்பங்களின் மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்டாது இழுத்துச்செல்ல மைத்திரி முற்பட்டிருக்கின்ற நிலையில் விரைவில் நாடாளுமன்றை கூட்டி வாக்கெடுப்பின் மூலம்
அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் சகல தரப்பினரையும் செயலாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையைக் கருத்திற்கொண்டு,
பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக்

About காண்டீபன்

மறுமொழி இடவும்