பிரிந்து சென்றவர்களுடன் இணைவது குறித்து சசிகலாவுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் : டிடிவி தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அணியினருடன் இணைந்து செயல்படுவது குறித்து சசிகலாவுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தனது வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறினார். இந்த வெற்றியைத் தொடர்ந்து முதலமைச்சர் அணியினர் மீண்டும் இணைந்து செயல்பட முன்வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

முன்னதாக, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா இருந்த இடத்தில் யார் இருக்க வேண்டுமென மக்கள் முடிவெடுத்துள்ளதாகவும், ஏழரை கோடி மக்களின் எண்ணங்களை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பிரதிபலித்துள்ளதாகவும் கூறினார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்