வடக்கு முதல்வர் மீதான குற்றச்சாட்டுக்கு கஜேந்திரகுமாரின் பதில்!

வடக்கு முத­ல­மைச்­சர் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மையை பத­விக்­கா­கவே விமர்­சிக்­கின்­றார் என்று கூறி­னால் அதைச் சிறு­பிள்ளை கூட ஏற்­காது என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தெரி­வித்­த­தா­வது-,

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு விசு­வா­ச­மாக இருந்­தி­ருந்­தால் அடுத்த தலை­மை­யாக அவர் இருந்­தி­ருப்­பார். முத­ல­மைச்­சர் சம்­பந்­தனை வீழ்த்தி தலை­மைப் பத­வியை பெற­வேண்­டும் என நினைக்­க­வில்லை.

சம்­பந்­தன் மீது ஒரு­வித நன்­றிக்­க­டன் இருப்­ப­தால்­தான் இப்­போ­தும் ஒரு நிலைப்­பாட்­டுக்கு வராது இன்­றும் அமை­தி­யாக இருக்­கின்­றார். தமிழ் மக்­களை சுமத்­தி­ரன் மட்­டும் அழிக்­க­வில்லை, சம்­பந்­தனே அழித்­துக்கொண்­டி­ருக்­கின்­றார்.

முத­ல­மைச்­சர் ஒரு பக்­கத்­தில் எழு­திய அறிக்­கைக்கு பத்து பக்­கத்­தில் தமி­ழ­ர­சுக் கட்சி பதிலை வழங்­கி­யுள்­ளது என்­றால் அவர்­கள் எந்­த­ள­வுக்கு அந்­த­ரத்­தில் உள்­ள­னர் என விளங்­கு கின்­றது.

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இடைக்­கால அறிக்­கை­யில் உள்ள விட­யங்­களை வீடு வீடாக சென்று மக்­கள் மத்­தி­யில் பொய்­யான பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு குழப்­பப் போகின்­ற­னர்.

தமிழ் மக்­கள் இந்த விட­யத்­தில் தெளி­வ­டைய வேண்­டும். அபி­வி­ருத்தி என்ற பெய­ரில் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இந்த தேர்­த­லில் வெற்­றி­யீட்­டி­னால் சர்­வ­தேச மட்­டத்­தில் தமிழ் மக்­கள் தமக்கு ஆத­ரவு உள்­ளது என்று வெளிக்­காட்டி அர­ச­மைப்பை நிறை­வேற்ற உத்­தே­சிக்­கின்­ற­னர் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்