கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆய்வு!

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதோடு அங்கு மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவை போட்டியிடுகின்றது. “தூய கரங்கள் – தூய நகரம் எனும் கோஷசத்தை முன்னெடுத்து தனது தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டுவரும் தமிழ்த் தேசியப் பேரவையினர் கொழும்புத்துறைத் துறைமுகப் பகுதியைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் மீனவர்களுக்கான இறங்குதுறையின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

பின்னராக வேட்பாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பேரவையின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவினருடன் இணைந்து எதிர்காலத்தில் அப்பிரதேசத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கள ஆய்விலும் ஈடுபட்டனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்காப் பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ்
தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி
தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது. இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள்,

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*