ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு தொடர்பான விபரங்களை வெளியிட்ட பிரித்தானியா, அடுத்த கட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி இது குறித்து விவாதிப்பதற்கென மூத்த அமைச்சர்களை கொண்ட குழுவொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரெக்சிற்றிற்கு பின்னரான உறவு தொடர்பில் பிரித்தானியா கலந்துரையாடவுள்ளது. வர்த்தக உத்தரவாதம், குடிமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கருத்திற் கொள்ளப்படவுள்ளது.

வலுவான பிரித்தானியாவையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏற்படுத்துவதற்கு எதிர்காலத்தின் பிரதான பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ளல் அவசியம் என பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்