விடுதலைப் புலிகளின் துப்பாக்கியை விற்க முயன்றவர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவராகச் செயற்பட்ட, மிகமுக்கியமானவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும், ஆயுதத்தை விற்பதற்கு முயன்ற, இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சார்ஜன்ட், கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தயாரிப்பான எம்.எம். 9 ரக கைத்துப்பாக்கி மற்றும் ஆறு ரவைகளை, 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு முயன்றபோதே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேலியகொடை பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவால், ராகம மத்துமகல பிரதேசத்தில் வைத்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இறுதிப் போர் இடம்பெற்ற, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், இராணுவத்தின் தாக்குதலில்வீரமரணம் அடைந்த , போராளியின் வித்துடலுக்கு அண்மையில் விழுந்து கிடந்த நிலையிலேயே இந்த கைத்துப்பாக்கியையும் ரவைகளையும் தான் மீட்டதாகவும், அதனை, ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்துவைத்திருந்தேன் என்றும் காவல் துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்ட சார்ஜன்ட், சூதாட்டம் மற்றும் பணம் பந்தயத்தில் அடிமையாகியிருந்ததாக அறியமுடிகிறது. ஆகையால், பல இலட்சம் ரூபாய், கடன்பட்டிருந்தார் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அந்த ஆயுதத்தை விற்பனை செய்வதற்கு, தன்னுடைய நண்பர்கள் ஊடாக, விலைபேசி கொண்டிருந்த வேளையிலேயே, இந்த விவகாரம் தொடர்பில், பொலிஸ் விசேட பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனையடுத்து, ஒரு குற்றவியல் கும்பலின் உறுப்பினராக, வேடமிட்டுக்கொண்டு அவருடைய வீட்டுக்கு சென்ற காவல் துறை விசேட பிரிவின் அதிகாரி, அவரைக் கைதுசெய்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ விசேட படையணியின் (எஸ்.எப்) சாஜன்ட், வவுனியாவில் உள்ள இராணு முகாமில் கடமையாற்றுபவர் என்றும் காவல் துறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்
கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது

About இலக்கியன்

மறுமொழி இடவும்