ஆவா குழவைச் சேர்ந்த மற்றொரு சந்தேகநபர் கைது!

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் தருசன் (வயது 21) என்ற இளைஞரே இன்று செவ்வாய்க்கிழமை காலை (15.08) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இளைஞரின் முகநூலில் ஆவா குழுவைச் சேர்ந்த நபர்களுடன் எடுக்கப்பட்ட குழுப் புகைப்படம் ஒன்றுபதிவுசெய்யப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்தே குறித்த இளைஞரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண மகளிர் விகார அமைச்சர் அனந்தி சசிதரன்
கட்சியிலும், ஆட்சியிலும் நல்ல பதவி வகித்து வந்தாலும் தன்னிச்சையாக செயல்பட முடியாததால் மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கலாம் என
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் மீள்குடியேறிய மக்கள், விடுவிக்கப்படாமல் உள்ள தமது

About இலக்கியன்

மறுமொழி இடவும்