பிரான்சில் இடம் பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 25 வது நினைவேந்தல் நிகழ்வு!

கேணல் கிட்டு உட்ட 10 மாவீரர்களின் 25 வது ஆண்டு வேந்தல் நிகழ்வு இன்று (03.02.2018) சனிக்கிழமை பகல் 15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திறான்சியில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை திறான்சி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. நரேஸ்குமார் ஏற்றி வைத்தார்.
மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தினை 28.08.2006 அன்று முகமாலைப் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை மயூரனின் சகோதரரும், 09.06.1991 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 2 ஆம் லெப்டினன் மாணிக்கத்தின் சகோதரியும் மேற் கொண்டனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மக்களால் சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் மேற்கொள்ளப்பட்டன .
அரங்க நிகழ்வுகளாக கலைபண்பாட்டுக்கழக இசைக்குழுவின் தாயக பாடல்களும், தமிச் சோலை மாணவிகளின் விடுதலைப் பாடல்களுக்கான நடனங்களும், மாணவர்களின் கவியரங்கமும், இடம் பெற்றன.

தமிழ் இளையோர்சார்பில் திரு. நிந்துலன் உரையாற்றும் போது, தாம் கேணல் கிட்டு அவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழவில்லை என்ற ஏக்கம் தனக்கு இருப்பதாகவும், அவர் குறித்த தரவுகளை இணையத்தின் ஊடாக பெற்ற போது அவரது ஆழுமையையும், அவரது தேடுதல்களையும் அறிந்து கொண்டதாகவும், தமிழீழம் என்ற இலட்சித்திற்காக இளைஞர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும், நாம் போராடாவிட்டால் எமது இனம் அழிந்து விடும் என்றும், கேணல் கிட்டுவின் உயிர் தியாகம் அவரின் மனவலிமையை காட்டுவதாகவும், கிட்டுமாம தான் வாழ்ந்த காலத்தில் தன்னால் இயன்ற பங்களிப்பைச் செய்துள்ளார் அதேபோல் இளையோர் அனைவரும் போராட்டப்பாதைக்கு ஒன்றிணைந்து வலுச் சேர்ப்போம் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா அவர்கள், கேணல் கிட்டு அவர்கள் தாயகத்தில் இருந்து 1989 ஆம் ஆண்டு புலம் பெயர்ந்து வரும் வரை அவரின் பன்முன ஆழுமை குறித்தும் , புலம் பெயர்ந்து வந்த பின் அவர் புலம் பெயர் அமைப்புக்களை வழி நடத்தியது குறித்தும், இன்றைய தாயக அரசியல் நிலமைகள்குறித்தும். ஐ.நா. 37 வது கூட்டத் தொடரில் பிரான்சில் இருந்து மக்கள் பங்குபற்றுவதன் அவசியம் குறித்தும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக நம்புங்கள் தமிழீழ் நளை பிறக்கும் படல் ஒலிக்கப்பட்டு, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் கோசம் முழுங்கி நிகழ்ச்சிகள் யாவும் நிறைவு பெற்றன.

About காண்டீபன்

மறுமொழி இடவும்