தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கெதிராக மூக்குடைபட்ட ஈபிடிபி!

தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு போட்டியாக ஈபிடிபியும் பொன்னாலை பகுதியில் நடத்த முற்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் ஆட்கள் வரவின்மையால் கைவிடப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் பொன்னாலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை ஈபிடிபி வைத்திருந்தது. இசை நிகழ்ச்சிக் குழுவொன்று, தமது வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்களுடன் வாகனங்களில் வந்திறங்கிய அவர்கள் பொன்னாலையில் உள்ள சனசமூக நிலைய முன்றலில் நூற்றுக்கணக்கான கதிரைகளை அடுக்கிவிட்டுக் காத்திருந்தனர்.

மக்களைக் காணவில்லை. பாடல்களைப் பாடினர். மக்களைத் திரட்ட அங்கும் இங்கும் அலைந்தனர். மக்கள் வீடுகளில் முடங்கினர். வேடிக்கை பார்ப்பதற்கு மட்டும் பத்திற்கும் குறைவானவர்கள் அங்கு சென்றனர்.

பொன்னாலை வட்டாரத்திலுள்ள மூன்று வேட்பாளர்களில் இருவர் உரையாற்றினர். கட்சி உறுப்பினர் ஒருவரும் பேசினார். கட்சியின் பிரதேச அமைப்பாளர் பேசவேயில்லை. மக்கள் வரவின்மையால் அவர் பேசியிருக்கவில்லையென அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினமிரவு பொன்னாலையில் இடம்பெற்றபோது அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர். கடந்த காலங்களில் இல்லாத எழுச்சி நிகழ்வாக இந்தத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அமைந்திருந்தது.

பேரவையின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) பொன்னாலை வட்டார வேட்பாளர் ந.பொன்ராசா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விசேட உரையாற்றியிருந்தனர்.

மேலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணிகளான கே.சுகாஸ், வி.மணிவண்ணன், வேட்பாளர் நடராசா, பொதுமக்கள் சார்பில் வே.தவமணி என்ற மூதாட்டி ஆகியோரும் உரையாற்றியிருந்தனர்.

தமிழர் சம உரிமை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தா.நிகேதன், வலி.மேற்கு பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பொன்னாலை மக்கள் என அதிகளவானோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் நெருக்கடி நிலை தொடர்பாகவும் இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தது.தமிழ்த் தேசியப் பேரவை ஆட்சியமைத்த பின்னர் செய்யக்கூடிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் மக்களுக்கு கூறப்பட்டிருந்தது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்