கிளிநொச்சியில் மின்வசதியின்றி ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆயிரத்து 176 குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டியுள்ளதாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசெயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலைப்பகுதியில் மக்கள் மீள்குடியேறி ஒன்பது மாதங்களாகியுள்ளபோதும், தமக்கான மின்சார வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மின்சார வசதியின்மையால் மீள்குடியேறி தற்காலிக வீடுகளில் வாழும் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதால் ,இப்பகுதி மக்கள் தமக்கான மின்சார வசதிகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலர் பிரிவில் மீள்குடியேறியுள்ள குடும்பங்களுக்கு மின்சார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்