அன்பான மக்களே சலுகைகளை முன்னிறுத்தி மாவீரத்தை கொச்சைப் படுத்திவிடாதீர்கள்!

பெப்ரவரி-10 இல் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்எங்களுக்கு வேலை எடுத்து தந்ததே அவங்கள் தான்…எங்கள் நெருங்கிய உறவுகளுக்கு வேலை எடுத்து கொடுத்தவர்கள்…விளையாட்டு மைதானத்திற்கு காணி தந்தவர்கள்… தாறன் என்று சொன்னவர்கள்…சனசமூக நிலையம் கட்டித் தந்தவர்கள்… கட்டித் தாறன் என்றவர்கள்…இதுபோன்ற இன்னோரன்ன விடயங்களை செய்தார்கள்… செய்வார்கள்… என்று உங்கள் வாக்குளை வீணை க்கோ, கை யிற்கோ, யானை க்கோ,தாமரை மொட்டுக்கோ, வீடு க்கோ செலுத்தும் எண்ணத்தில் உள்ளவர்களா நீங்கள்…

அன்பான மக்களே சிந்தியுங்கள்!

நாற்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்கள் தமது இன்னுயிரை ஆகுதியாக்கியது இவ்வாறான சலுகைகளுக்காக அல்ல.

எத்தனை எத்தனை பேர் பல்கலைக் கழக பட்டப்படிப்பையும் பள்ளிப் படிப்பையும் அரச வேலையையும் உயர் பதவிகளையும் தூக்கியெறிந்துவிட்டு விடுதலைப் போராளியாக அணிவகுத்தார்கள்.

அவையெல்லாம் கடந்த இன விடுதலை எனும் உயரிய இலட்சியத்தின் வழியே உலகம் வியக்கும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய ஒப்புவமையற்ற மாவீரத்தை கொச்சைப்படுத்துவதாகவே இவ்வாறான சலுகைகளை முன்னிறுத்தி மேற்கூறிய சின்னங்களுக்கு வாக்களிப்பது அமையும்.
இலட்சிய வீரர்களின் கனவுகளை தோள்களில் தூக்கி சுமக்காவிட்டாலும் பறவாயில்லை அவர்கள் கனவை கலைத்து விடாதீர்கள்.அன்பான மக்களே!சிந்தித்து வாக்களிப்போம்!

ஈழதேசம் இணையம்!

தொடர்டர்புடைய செய்திகள்
மயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 600 இற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்திருத உண்மை அம்பலமாகியுள்ளது. உயர்பாதுகாப்பு வலையப்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு இந்து கலாச்சார அமைச்சராக நியமிக்கபட்டுள்ளமை திட்டமிட்டு சைவர்களிற்கும் முஸ்லீம்களிற்குமிடையே பிளவை
தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*