கொலைவறியை தெறிக்கவிட்ட இராணுவ அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி ஆரம்பம்!

கடல் கடந்த போதிலும் தமிழர்கள் மீதான கொலைவெறியை தெறிக்கவிட்ட இராணுவத் அதிகாரியை கைது செய்ய வலியுறுத்தும் கண்டனப் பேரணி எழுச்சியுடன் ஆரம்பித்துள்ளது.சிறிலங்கா சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள சிறிலங்காத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள்.

இதன் போது தூதரகத்தில் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டிருக்கும் இனப்படுகொலைக் குற்றவாளி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழத் தமிழர்களைப் பார்த்து கழுத்தை அறுத்து வீசிவிடுவோம் என்பதை சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.இறுதி யுத்தம் நடைபெற்ற காலத்தில் இனப்படுகொலை இராணுவத்தின் பிரிவொன்றின் அதிகாரியாக செயற்பட்டு தமிழர்களை கொன்று குவித்திருந்தார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.கடல் கடந்த நிலையிலும் தமிழர்கள் மீதான கொலைவெறியை தெறிக்க விட்டுள்ளார் என்றால் தமிழர்களை அழித்தொழிக்கும் யுத்தக் களத்தில் எவ்வாறு செயற்பட்டிருப்பார் என்பது தெளிவாகிறது. ஆகவே இனப்படுகொலைக் குற்றவாளியான இவரை பிரித்தானிய அரசு கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கண்டனப் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பிரித்தானிய சிறலங்கா தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்திருந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அணிதிரண்டுள்ளார்கள்.கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் நோக்கி பேரணியாகச் சென்று சிறிலங்கா அரசு புலம் பெயர்ந்த தமிழர்கள் முன்னும் அதன் கோர முகத்தை காட்டி கொன்றொளிப்போம் எனும் சைகையை காட்டி நிற்பதையும் தமிழர்களுக்கான நீதி வேண்டியும் எமது உரிமைகளையும் நீதியையும் நிலைநிறுத்த பிரித்தானிய அரசு துணை நிற்கவேண்டுமென வலியுறுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணையம்.

தொடர்டர்புடைய செய்திகள்
வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது
வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவுக்கு போலி கடவுச்சீட்டின் ஊடாக செல்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று தமிழர்கள் உட்பட ஐவர்
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு

About சாதுரியன்

மறுமொழி இடவும்

*