மட்டக்களப்பில் இளம் குடும்பப் பெண் தீயில் கருகி பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு – கோப்பாவெளி, 78ஆம் கட்டையில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு குழந்தைகளின் தாயான 30 வயதுடைய கிருஷ்ண பிள்ளை இராஜினி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவதால் நோயைக் காரணம் காட்டி கணவன் பிரிந்து சென்று விட்டதாகவும், பெற்றோரின் தயவிலேயே இவர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பெண்ணின் இரு பிள்ளைகளும் உறவினர்களின் பராமரிப்பில் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸ் வாக்கு மூலத்தில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வேளையில், அயலவர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்த போது அவர் தீக்காயங்களுக்குள்ளாகி உயிருக்காக போராடிக் கொண்டிருந்துள்ளார்.

இதையடுத்து குறித்த பெண்ணை வைத்தியசாலையில் அனுமதித்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேதபரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் பற்றி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்