10 கிலோ கஞ்சா மீட்பு 5 பேர் கைது

யாழ் பருத்தித்துறைஅல்வாய் தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 10கிலோகிராம் கேரளா கஞ்சாவினை நெல்லியடி பொலிசார் மீட்டுள்ளனர்.

பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தேவரையாழி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள வீட்டினை சுற்றிவளைத்த பொலிசார் அங்கு பொதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த 10 கிலாகிராம் கஞ்சாவை மீட்டதுடன் வீட்டில் இருந்த 5பேரையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பொலிஸார் வீட்டுக்குள் அதிரடியாகப் நுழைந்த போது அங்கு கஞ்சா பொலித்தீன் பைகளில் இருந்து வேறாக்கப்பட்டுப் பொதியிடப்பட்டுக்கொண்டிருந்தது.

இன் நிலையில் குறித்த கஞ்சாவை கைப்பற்றியதுடன் போதியிடலில் ஈடுபட்டிருந்த 5பேரையும் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்