பாலச்சந்திரனின் படத்துடன் முள்­ளி­வாய்க்­கா­லில் போராட்­டம்!!

சிரிய நாட்­டில் ஏற்­பட்­டுள்ள போரி­னால் இடம்­பெ­றும் மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று போராட்டம் இடம்பெற்றது.

முள்­ளி­வாய்க்­கால் முதன்­மைச் சந்­திக்கு அரு­கில் இந்­தக் போராட்­டம் நடைபெற்றது. அதில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுபடுத்தும் படங்களுடன் கூடிய பாதகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர். குறிப்பாக பாலச்சந்திரனின் படங்கள் தென்பட்டன.

சிரியப் படு­கொ­லை­யைக் கண்­டித்து வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாவட்­டங்­க­ளில் நேற்­று­ முன்­தி­னம் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன. இன்று முல்­லைத்­தீ­வு, மன்னார், மலையகம் போன்ற இடங்களில் போராட்­டங்கள் இடம்­பெ­ற்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
மே 18 என்ற புனித நாளில் இனப்படுகொலையின் பங்காளிகளுக்கும் இடமளித்து அந்நிகழ்விற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இறுதியாக வீரர்களை விதைத்த மாவீரர் துயிலுமில்லமாக காணப்படும்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*