பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஜெனிவா மாநாட்டில்!

ஜெனிவாவில் நடைபெற்று வரும் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் 14 உப குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதில் இலங்கையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்த கூட்டங்கள், மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் உப அறைகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரநிதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரைக்க உள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்