பிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்

சர்வமத தலைவர்களை இணைத்து பிராத்தனையும் நடைபயணமும் மேற்கொள்ளவுள்ளதாக கோப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள். கேப்பாபிலவு மக்களின் காணிப்பிரச்சனை தொடர்பில் 169 ஆவது நாளாக(16-08-17) போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு இதுவரை எந்தஒரு முடிவும் அறிவிக்கப்படாத நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18-08-17) வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் சர்வமத பிரதிநிதிகளை அழைத்து வேண்டுதல் பிரார்த்தனை ஒன்றினை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து நடை பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக போராட்டம் நடத்தும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

தங்கள் சொந்த காணிகளை படையினரிடம் இருந்து விடுவிக்க கோரி கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு இதுவரை எந்த ஒரு உறுதியான முடிவும் அறிவிக்கப்படாத நிலையில் 111 ஏக்கர் காணியினை விடுவிக்க 148 மில்லிய் ரூபாவை படையினருக்கு கொடுக்க மீள்குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஆனால் இந்த நிலங்களை பூர்வீகமாக கொண்ட மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றார்கள் இன்னிலையில் 171ஆவது நாளான எதிர்வரும் (18-08-2017) வெள்ளிக்கிழமை வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலில் இருந்து நடைபயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்கள் இந்த நடைபயணம் மடு மாதா நோக்கி சென்று கரையோரமாக கொழும்பை சென்றடைந்து அங்கு ஜனாதிபதியினை சந்திக்கவுள்ளதாக கேப்பாபிலவு மக்களின் போராட்ட குழு தலைவர் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் பௌத்த மததுறவிகள்,மற்றும் முஸ்லீம்,கிறிஸ்தவ மத தலைவர்களை ஒன்றிணைத்து அம்மன் வழிபாடு ஒன்றினை மேற்கொண்டு நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முதற்கட்ட நடவடிக்கைக்காக போராட்ட காரர் ஆறுமுகம் அவர்கள்வற்றாப்பளை ஆலயக குருக்கல் மற்றும் நிர்வாகத்திடம் சென்று பேசி அனுமதிபெற்றுள்ளதுடன் அவர்களின் ஆசியும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு கிராம மக்களின் 482 ஏக்கர் நிலப்பரப்பு படையிரின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த பகுதியினை சேர்ந் 138 குடும்பங்கள் தங்கள் வாழ் இடத்தை விடுவிக்க கோரி போராடி வருகின்றார்கள்.

இவர்களில் சுவர்ணபூமியான 35 குடும்பங்களின் 42 ஏக்கரும்,உயுதி காணியான 9 குடும்பங்களின் 38 ஏக்கர் காணியும்,போமிற் காணியான 79 குடும்பங்களின் 172 ஏக்கர் காணியும், பெருந்தோட்டத்தினை சேர்ந்த 150 ஏக்கர் காணியும்,47 ஏக்கர் வயல் நிலங்களும், பொதுமைதானம் கோவில்களை உள்ளடக்கிய 8 ஏக்கர் காணியும் மக்களின் பாவனைக்காக விடுவிக்கப்படாமல் படையினரின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து காணப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்