துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் கைது : 17 பேருக்கு வலைவீச்சு !!

யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை நேற்று கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக்காட்டுப் பகுதியில் நேற்றுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற குழப்ப நிலைக்குக் காரணமான குழுவின் தலைவர் அவர்களில் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைத் தாம் தேடி வருவதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்