முல்லைத்தீவில் இராணுவத்தின் துப்பாக்கியை பறித்துக்கொண்டோடிய நபர் கைது!

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் காட்டுப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவரிடம் இருந்த ஏகே-47 துப்பாக்கி ஒன்றை பறித்து சென்ற நபர் கைதுசெயயபட்டுள்ளார் என முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் பகுதியில் சட்டவிரோத மரம் கடத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த இராணுவத்தினர் முற்பட்டுள்ளனர்.

இதன் போது இராணுவச் சிப்பாய் ஒருவர் வைத்திருந்த ஏகே-47 துப்பாக்கியை சட்டவிரோத மரம் கடத்த முற்பட்ட நபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பியோடியுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்து பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தனர்.

இந்த நிலையில் இன்றையதினம் மாலை குறித்த நபர் துப்பாகியுடன் கைது செய்யபட்டுள்ளதாகவும் அவரை நாளைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுவருவதாகவும் அறிய முடிகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்