ரணிலுடன் இணைந்த பசில்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆதரவு வழங்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பசில் ராஜபக்ஷ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்காமல் இருப்பதற்கான நிலையப்பாட்டிலேயே பசில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டு எதிர்க்கட்சி குழுவினர் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் போது, பசிலின் ஆதரவு கிடைப்பதாக தெரியவில்லை எனவும் அரசியல் செயற்பாட்டுகளுக்கு தலைமை வழங்கும் பசில் ஆதரவு வழங்காமல் அமைதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் இரண்டு வருட காலங்களுக்குள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை நடத்தி செல்ல சந்தர்ப்பம் வழங்க வேண்டும். அதன் ஊடாக பிரதமர் மீதான மக்கள் எதிர்ப்பு மேலும் அதிகரித்து அடுத்த தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி பாரிய வெற்றியை பெறும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக செயற்படும் ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்புடைய சில குழுக்களுடன் பசில் ராஜபக்ச நடத்தும் கலந்துரையாடல் தொடர்ந்து நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது.

எப்படியிருப்பினும் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இதுவரையிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்