வவுனியாவில் 16 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

வவுனியா வேப்பங்குளம் 95/34C விலாசத்தில் வசித்து வந்த விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் (03.04) மீட்கப்பட்டுள்ளார்

நேற்றைய தினம் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாடசாலை சீருடைகளை துவைத்து தனது சப்பாத்துக்களையும் கழுவி பின்பு மதிய உணவு உண்டு விட்டே தற்கொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மாணவியின் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் என்பதினால் இருவரும் பணிக்கு சென்றிருந்த வேளை மாணவி வீட்டில் தனியாகவே இருந்துள்ளார். மாலை 4.40 மணியளவில் இருவரும் வீடு திரும்பிய வேளை வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் குறித்த மாணவி உயிரிழந்த நிலையிலையே காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று அதிகாலை வவுனியா கற்குழியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்