வெனிசுலா: சிறையில் கலவரம்!- 37 கைதிகள் படுகொலை!

வெனிசுலா நாட்டில் உள்ள சிறையில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

வெனிசுலா நாட்டில் உள்ள அமாசான்ட்ஸ் மாகாணத்தில் போர்ட்டோ அயாகுஜோ என்ற சிறிய நகரம் உள்ளது. அங்கு சிறை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த ஜெயிலில் 107 பேர் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் பலர் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களை செய்தவர்கள்.

ஜெயில் கைதிகள் 2 பிரிவாக ஏற்கனவே செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் அவர்களுக்கள் அடிக்கடி மோதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டனர்.

இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை அடக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். அவர்களையும் கைதிகள் தாக்கினார்கள். இதில் 14 சிறை அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர்.

கைதிகளுக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பது தெரியவில்லை. சிறையில் காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்