அதிமுகவின் ஈபிஎஸ் ஒபிஎஸ் அணிகள் இணைகிறதா?இன்று தெரியும் முடிவு!

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க தனி ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருதார். மேலும் அணிகள் இணைப்பிற்காக ஓ.பி.எஸ்ச விடுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மாலை ஓபிஎஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் தனது ஆதரவு எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு பிறகு அணிகள் இணைப்பு குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்