வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்த சர்வதேச பிரதிநிதிகள்

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களை சர்வதேச பிரதிநிதிகள் நேற்று (17.08) இரவு 7.00 மணி தொடக்கம் 7.45மணிவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்கள்.

ஐ.நா அலுவலக விசேட பணியாளர் சோமஸ் அவர்கள் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து பேசியிருந்தார். இதன்போது, ஜனாதிபதியுடன் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்ட பெண்பிள்ளைகள் சம்பந்தமாவும், எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதுடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தற்போதைய நிலமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, தாம் அரசாங்கத்திற்கு இதுவரையில் அழுத்தம் கொடுத்துக்கொண்டு இருப்பதாகவும், இதற்கு முறையான திட்டங்களை நாங்கள் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளோம். வெகு விரைவில் இதற்கு தீர்வினை பெற்றுத்தருவோம் எனவும் ஐ.நா அலுவலக விசேட பணிப்பாளர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்