தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு 01.05.2018 (செவ்வாய்க்கிழமை) யாழ் நல்லூர், கிட்டு பூங்கா வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக தொழிலாளர்தின ஊர்திப் பேரணி மற்றும் பொது மக்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்ளும் பேரணியும் பருத்தித்துறை வீதியிலுள்ள சட்டநாதர் கோவிலடியில் பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகி பருத்தித்துறை வீதி வழியாக கிட்டு பூங்காவை சென்றடைந்ததும் பொதுக்கூட்டம் ஆரம்பமாகும்.

இனவழிப்புக்கு ஐநா பாதுகாப்புச் சபையூடாக விசாரணையை வலியுறுத்தியும், தமிழ் தேசமும், இறைமையும் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் அரசியல் விடுதலையை வென்றெடுக்கவும், தமிழ்த் தேசத்து தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிவதல், இடம்பெயர்ந்த மக்களின் உடனடி மீள்குடியேற்றம் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி நடைபெறவுள்ள தொழிலாளர் தின நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களும் ஓரணியில் திரண்டு ஒற்றுமையாய் குரல் கொடுப்போம். இலட்சியத்தின் கீழ் அனைவரும் ஒற்றுமையாய் ஓரணியில் திரள்வோம். அணிதிரண்டு வாரீர்.

நன்றி

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

About இலக்கியன்

மறுமொழி இடவும்