வடமராட்சி கிழக்கில் கடற்கரை விற்கப்படவில்லை!

வடமராட்சி கிழக்கில் முஸ்லீம்களுக்கோ இன்னும் யாரிற்குமோ காணிகள் விற்கப்படவில்லை .ஒரு சிலர் தொழிற்செய்யும் காலத்துக்கு மட்டும் தமது காணியில் இருப்பதற்கு என்று ஒரு குறிப்பிட்டதொகைப்பணத்தை வாங்கியுள்ளார்கள் என்பதே உண்மையென வடமராட்சி கிழக்கு மீனவ சங்கம் அறிவித்துள்ளது.

தென்னிலங்கை மீனவர்கள் சட்டவிரோதமற்ற மீன்பிடிமுறையில் தொழிலில் ஈடுபட்டால் அதனை உள்ளுர் மீனவர்களால் தடுக்கமுடியாதென சில தரப்புக்கள் வாதிட்டுவருகின்றன. அத்துடன் உள்ளுர் மீனவர்களிடமிருந்து தென்னிலங்கை மீனவர்கள் கடற்கரைகளை கொள்வனவு செய்திருப்பதாகவும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

இதனையே மறுதலித்துள்ள மீனவ அமைப்புக்கள் காணிகளினை சிலர் பணம் பெற்று குத்தகைக்கு வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் எவராயினும் சட்ட விரோதமான முறையில் மீன்பிடித்தலை மேற்கொண்டால் அதனை தடுக்கலாம். சட்டவிரோதமாக குடியேறுவதை கூட தடுக்கலாம். தற்போது நாம் அவர்கள் அங்கிருந்து வெளியேற காலக்கெடுவை கொடுத்துள்ளோம்.

அவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்கரையினை அண்டிய பகுதிகளில் உள்ள காணிகளை சொந்தமாக விலைக்கு பெற்று குடியேற அனுமதிக்கப்போவதில்லை.

ஏற்கனவே நாயாறு முதல் முகத்துவாரம் வரை எமக்கில்லை.இந்நிலையில் தற்போது மீண்டும் வடமராட்சி கிழக்கு மீது அவர்களது பார்வை திரும்பியிருக்கின்றது.இதனை அனுமதித்தால் எதிர்காலத்தில் வடமராட்சி கிழக்கும் தமிழ் மீனவர்கள் வசம் இல்லாது போகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்.வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கேவில் பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவா் ஒருவா் நீாில் மூழ்கி உயிாிழந்துள்ளாா். வலிப்பு ஏற்பட்டு
வடமராட்சி கிழக்குப் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விவசாய நடடிவக்கைகளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மழையினை நம்பிய பெரும்போக பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில்
சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த 196 ஏக்கர் நிலத்தை

About இலக்கியன்

மறுமொழி இடவும்