அவுஸ்ரேலிய போர்க்கப்பலில் சிறிலங்கா கொமாண்டோக்களுக்குப் பயிற்சி

அமெரிக்கா நடத்தும், RIMPAC-2018 கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் படைப்பிரிவு கொமாண்டோக்கள், அவுஸ்ரேலிய கடற்படைக் கப்பல் மூலம், ஹவாய் தீவுகள் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

RIMPAC கூட்டுப் பயிற்சியில் முதல் முறையாக சிறிலங்கா கடற்படை பங்கேற்கிறது.

இதற்காக, சிறிலங்கா கடற்படையின் 25 மரைன் கொமாண்டோக்கள், லெப்.கொமாண்டர் சனத் மகிந்த தலைமையில், கடந்த மே 21ஆம் நாள் அவுஸ்ரேலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் கடந்த மே 22ஆம் நாள், அவுஸ்ரேலியாவின் ரவுன்வில் தளத்தில், றோயல் அவுஸ்ரேலிய கடற்படையின் உலங்குவானூர்தி தாங்கி கப்பலான, HMAS Adelaide இல் ஏற்றப்பட்டனர்.

HMAS Adelaide கப்பலில் அவுஸ்ரேலிய கடற்படையினருடன் ஒரு வாரம் சிறிலங்கா கடற்படை மரைன் கொமாண்டோக்கள், பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, HMAS Adelaide கப்பல் கடந்த ஜூன் 2ஆம் நாள் ஹவாய் துறைமுகம் நோக்கி புறப்பட்டுள்ளது.

எதிர்வரும், 26ஆம் நாள் இந்தக் கப்பல் ஹவாய் சென்றடையும். செல்லும் வழியில், பிஜி, டொங்கா, உள்ளிட்ட தீவுகளிலும் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்