அதிமுக அணிகள் இணைப்பு தாமதமாவது ஏன் தெரியுமா?காரணம் இதுதான்…

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இதோ இணைகிறது.. இதோ இணைகிறது என பரபரப்பை கூட்டினாலும் திடீரென நின்று போய்விடுகிறது. இரு அணிகளும் இணைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் 10 விஷயங்கள் இவைதான்…

டெல்லி செல்வாக்கு மூலம் சசிகலாவை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையத்திடம் இருந்து அறிவிப்பு வெளியிட செய்ய வேண்டும் என்கிறது ஓபிஎஸ் தரப்பு. டெல்லியோ முதலில் இரு அணிகளும் இணையுங்கள்… சசிகலா தகுதி நீக்கம் மட்டுமல்ல இரட்டை இலையும் கிடைக்கும் என்கிறது.

டெல்லி கைவிரித்த நிலையில் தினகரனை நீக்கியது போல சசிகலாவை நீக்குங்கள் என்கிறது ஓபிஎஸ் தரப்பு. எடப்பாடி தரப்போ, நீங்களும் தலைமை கழகம் வாங்க… சேர்ந்து நீக்கலாம் என்கிறது.

பொதுச்செயலர் பதவி இல்லாத நிலையில் தேர்தல் காலங்களில் பி பார்ம் படிவத்தில் யாருக்கு கையெழுத்திடும் அதிகாரம் என கேட்கிறது ஓபிஎஸ் தரப்பு. ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருமே கையெழுத்திடலாம் என்கிறது எடப்பாடி தரப்பு. தேர்தல் காலங்களில் பி பார்மில் இருவர் கையெழுத்து போடுவதை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிடும் என்பது கூடவா உங்களுக்கு தெரியாது என ஏகடியம் செய்கிறது ஓபிஎஸ் அணி.

தங்களது பக்கம் இருக்கும் பெரும்பாலானோருக்கு கட்சி, வாரிய பதவிகள் வேண்டும் என்கிறது ஓபிஎஸ் அணி. உதாரணமாக 25 வாரியங்கள் இருக்கிறது எனில் 15 தங்களுக்கு என்கிறது ஓபிஎஸ் தரப்பு.

மாவட்ட நிலவரங்களை கவனத்தில் கொண்டு கட்சி, வாரிய பதவிகளை பகிர்ந்து தருவதில் எடப்பாடி தரப்பு ரொம்பவே தயக்கம் காட்டுகிறது. அத்துடன் இப்படியெல்லாம் செய்தால் எங்களுக்குள் கலகம் வந்துவிடும் என்கிறதாம்.

ஓபிஎஸ் அணியில் சீனியர் ஒருவர் அமைச்சர் பதவி கேட்டு அடம்பிடிக்கிறார்… ஆனால் அவருக்கு மட்டும் அமைச்சர் பதவி உறுதியாக இல்லை என ரெட் சிக்னலை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.

இதுதான் அதிமுக அணிகள் இணைப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்கள்.. இதில் தீர்வு காணப்படும் வரை இதோ அதோ என்கிற இழுபறி நீடிக்கவே செய்யும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்