9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

தீச்சட்டி ஏந்தியும், காவடிகள் எடுத்தும் அவர்கள் தத்தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்றனர்.

பக்தர் ஒருவர் 9 அரிவாள்கள் மேல் படுத்து பறவைக் காவடி எடுத்தமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இதுவரை இவ்வாறு பறவைக் காவடி எடுப்பதைக் கண்டதில்லை என்று ஆலயத்தில் நின்றவர்கள் பேசிக் கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்