வங்கிக் கடனைச் செலுத்தாத நபர் கைது

ஷார்ஜாவில் உறவினர் வாங்கிய கடனை அடைக்க முடியாததால், தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தின் காரைக்குடியைச் சேர்ந்த ஒருவர் துபாய் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

அவர் தன்னுடைய உறவினருக்காக வங்கியில் கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

ஆனால், அவரது உறவினரோ பணத்தை கொடுக்காமல் பாதியிலே ஊருக்கு சென்றுவிட்டார்.

இதனால் வங்கியில் உறவினருக்கு கடன் வாங்கி கொடுத்ததன் காரணமாக கைது செய்யப்பட்டதுடன், அவரது வீட்டிற்கு வங்கிக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர்களது விசா காலம் முடிந்த நிலையில், துபாய் தூதரகத்தின் மூலம் கடிதம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்